Sunday, March 14, 2021

19. உலகெங்கிலுமுள்ள RH -Ve ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டது போன்ற கனவு!

RH -Ve இரத்தவகை என்பது பெரும்பாலும் வெள்ளையின மக்களிலேயே அதிகம் காணப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி மற்ற  இடங்களில் இந்த ரத்த வகையைச் சேர்ந்த மக்கள் இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறார்கள். நம்மூரில் கூட இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் சொல்லும் விஷயம் என்னவென்றால் இந்த ரத்த பிரிவு 50,000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருக்க வேண்டும். ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றிய ஆதி மனித இனத்தில் இந்த இரத்தப் பிரிவு கிடையாது. இவர்கள் ரீசஸ் வகை குரங்குகளிலிருந்து தோன்றிய  மனிதர்கள் என்றும் சொல்பவர்கள் உண்டு. எது எப்படியோ ஆனால் இன்று உலகின் ஆதிக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த வெள்ளைக் இனத் தலைவர்கள் குறிப்பாக இங்கிலாந்து ராஜ வம்சம் மற்றும் பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் இந்த இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். 

2018ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில்  RH -Ve இரத்த பிரிவை சேர்ந்த மக்கள் ALIENCON என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதன் பிறகும்  தொடர்ந்து நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் விவாதித்த முக்கியமான விஷயம் அவர்களுக்கு அடிக்கடி வேற்றுக் கிரகவாசிகளால் ஆழ்ந்த நித்திரையில் கடத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதாக சொல்கிறார்கள். இதில் சில ஆண்களும் பெண்களும் சொல்வது என்னவென்றால்; வேற்றுகிரக வாசிகள் தங்களை அவர்களின் விண்கலங்களுக்கு எடுத்துச் சென்று கலப்பினக்  குழந்தைகளை  உருவாக்கி வருவதாகவும்; தங்கள் வேலை முடிந்ததும், அவர்களை மீண்டும் இருந்த இடத்திலேயே விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள் ( மிக சமீபத்தில் இந்த விஷயத்தை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன்  "Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues" என்ற ஆய்வறிக்கையின் மூலம்   வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது). சுயநினைவு வந்து  கண்விழித்துப் பார்த்தால் உடலின் சில இடங்களில் குறிப்பாக முதுகுத்தண்டில் நுண்ணிய துளைகள் போட்ட வடுக்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.அப்படியானால் வேற்றுகிரக வாசிகளால் இங்கே அனுப்பப்பட்டு நாம் இன்னும் அவர்களின் தொடர் கண்காணிப்பில் தான் இருக்கின்றோமா? இதில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர் இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் முன்னாள் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர் நிக் போப்

ஒரு  தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் "வேற்றுகிரஹ வாசிகள் இருக்கிறார்களா என்று பில்கிளின்டனிடம் கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது சுத்தப் பொய் என்கிறாரே!" என்று கேட்க; "ஆமாம்! இல்லை என்று சொல்லவேண்டும்  என்பது தான் எங்களுக்கு இடைப்பட்ட உத்தரவு" என்று நகைச்சுவையாக பேசுவதுபோல்  மறைமுகமாக  ஒரு  உண்மையை  ஒபாமா  கூறியுள்ளார் என்றே இந்தப் பேட்டியைக் கண்டவர்கள் கருத்து பதிவிடுகிறார்கள்!      

2003ல் இதைப் பற்றி ஆய்வு செய்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினர் (Rh -Ve  ரத்த வகையினரென்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை) பொதுவாக நித்திரையில் ஏற்படும் ஒருவகையான தற்காலிக பக்கவாதத்தினாலும்  அதனோடு சேர்ந்த மாயையினாலுமே (hallucination) இப்படிப்பட்ட வித்தியாசமான கனவுகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். நமது கிராமங்களில் கூட இதை 'அமுக்குவான் பேய்' என்று சொல்வார்கள்.

எனது கருத்து: ஒத்த சிந்தனையுடைய இருவருக்குள் (அதாவது இரு வெவ்வேறு நபர்கள் ஒத்த அலைவரிசையில் சிந்தித்தால்) அவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படலாம், நட்பு ஏற்படலாம், காதல் மலரலாம்,கதை, கவிதை போன்ற படைப்புகள், கண்டுபிடிப்புகள் கூட ஒத்துப் போகலாம் எனும்போது படைப்புகளின் திறவுகோலான மனதின் கனவுகள் மட்டும் ஏன் ஒத்துப்போகாது? அப்படியானால் ஓர் குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருசிலரின் மனது நித்திரையிலோ அல்லது வெற்றுக் கண்களாலோ சில பிம்பங்களைப் பார்க்கிறது என்றுதானே பொருள் ?அப்படியானால் அந்த பிம்பங்கள் நமது கண்களுக்குப் புலப்படாத உண்மையாக ஏன் இருக்கக்கூடாது?

உதாரணம்: இங்கே ஒரு நரம்பியல் மருத்துவர் தனது நண்பர்களுடன் எல்எஸ்டி (Lysergic acid diethylamide) என்ற‌ அதிக சக்தி கொண்ட போதைப் பொருளை சோதனைக்காக பயன்படுத்தியபோது நேரத்தில் மாற்றத்தை உணர்ந்ததாகவும் (அவருக்கு சில மணி நேரங்கள் தன்னை மறந்த நிலையில் இருந்ததாகத் தோன்றியிருக்கிறது.ஆனால் உண்மையில் அவர் சுய நினைவிற்கு திரும்ப வர எடுத்துக்கொண்ட நேரம் சில நிமிடங்கள் மட்டுமே!), அதேபோல் தனக்குத் தோன்றிய அதே பிம்பங்கள்,நேரப் பிழர்வு(time slip) போன்றவை தன்னுடன் அமர்ந்த தோழிகளுக்கும் தோன்றியதெனச் சொல்கிறார்.

பறக்கும் தட்டுகள் அடிக்கடி வந்து செல்லும் இலங்கையிலுள்ள சோமாவதி புத்தர் கோவில்:

அமெரிக்காவில் வசித்து வரும் யூடியூபர் மற்றும் பண்டைய கோவில்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழர் திரு.பிரவீன் மோகன் அவர்கள். இவர் தன்னுடைய பெரும்பாலான வீடியோக்களில் தொன்மையான கோவில்களுக்கும் வேற்றுகிரக உலகங்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நிறைய வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் அவருடைய வீடியோக்களை யூடியூப் சமீபகாலமாக நீக்கி வருவதாக புகார் சொல்லியிருக்கிறார். இவருடைய ஒரு வீடியோவில் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேயுள்ள சோமாவதி புத்தர் கோவிலில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுக்கள் தென்படுவதாகவும் அவற்றைப் பற்றி குறிப்பிடும்  அங்குள்ள புத்த பிட்சு 'அவை கடவுளின் வாகனம்' என்றே சொல்வதையும் பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த கோவிலில் கோபுர உச்சியில் அமைந்துள்ள ஒரு 'ஸ்படிகக் கல்' தான் முக்கிய தொலைத்தொடர்புச் சாதனமாக இருந்து வேற்று கிரகவாசிகளை அங்கே இழுப்பதாகக் கூறுகிறார் பிரவீன்மோகன். மேலும் அந்த கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோவிலுக்கு மேல் 'பறக்கும் தட்டு' வந்துசெல்லும் புகைப்படங்கள் அனைத்தும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் போன்ற நம்பத்தகுந்த மனிதர்களால் எடுக்கப்பட்டதே என்றும் சொல்கிறார்கள்.

இதே பிரவீன் மோகன் அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு கருத்தையும் முன்வைத்திருந்தார். அதாவது ஆப்பிரிக்காவில் லயன் சஃபாரி செல்லும்போது, சிங்கம் நாம் ஜீப்பில் சென்றால் நம்மைப் பாறை என்று தான் நினைத்துக் கொள்ளுமாம். அதனால் தான் திறந்த வண்டிகளில் சென்றாலும் கொடிய விலங்குகள் நம்மைத் தாக்குவதில்லை என்கிறார். அதுபோல் வேற்றுகிரகவாசிகள் எளிதாக நம்மை ஏமாற்றி நமது கண்களுக்குப் புலப்படாமல் நம்முடனேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

சமீபத்தில் கூட விஞ்ஞானி மற்றும் விண்வெளி வீராங்கனை Dr.ஹெலன் ஷர்மன் வேற்றுகிரஹ வாசிகள் குறித்த கருத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது கார்பனும், நைட்ரஜனும் சேர்ந்த கலவையான பூவுலக உயிரினங்களைத் தாண்டி மற்ற வேதிப்பொருட்களின் கலவையாக நமக்குத் தெரியாத உயிரினங்கள் நமக்குள்ளேயே இருக்கலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார். 

இது அமானுஷ்ய சக்திகள், கடவுள் என்று அனைத்துக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

கனடா நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் பால் ஹெலியர் வேற்றுகிரகவாசிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.அவர் சொல்வது 'வேற்றுக்கிரக வாசிகளுக்கு டெலிபதி மூலம் மற்றவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்' என்றே சொல்கிறார். இதே கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள்  சொல்லக் கேட்டுள்ளேன்.  

தம்புசாமி பிள்ளை: மலேசியாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாபாரி தம்புசாமி பிள்ளைக்குக் கனவில் தோன்றிய பராசக்தி தன் மகனுக்கு ஒருகோவில் எழுப்பும்படி சொன்னதன் விளைவே இன்று உலகப்புகழ் பெற்ற 'பத்துமலை முருகன்' கோவில் உருவானது. இதுபோல் மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பலருக்கும் கனவில் கடவுள் தோன்றி சொன்னது தான்  இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான கோவில்கள் உருவாக காரணம்.

அப்படியானால் நமது ஆழ்ந்த உறக்கத்தில் நமக்குத் தெரியாத விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுப்பது, நம்மில் குறிப்பிட்ட சிலரை கூட்டிச் சென்று ஆய்வு மேற்கொள்வது, நம்மை முன்பின் அறியாத சிலருடன் 'டெலிபதி' மூலம் தொடர்புகொள்ளச் செய்வது,பிறரின் ஆழ்மனதை அறிய வைப்பது யார்? கடவுளா? இல்லை நம்மைவிட அறிவிலும் தொழில்நுட்பத்திலும் மேம்பட்ட இனம் தான் இந்த வேற்று கிரகவாசிகளா? இல்லை இந்த இரண்டுமே ஒன்றுதானா?


No comments:

Post a Comment