Showing posts with label 1. ஞானக் குழந்தைகள் ஓர் அறிமுகம்!. Show all posts
Showing posts with label 1. ஞானக் குழந்தைகள் ஓர் அறிமுகம்!. Show all posts

Tuesday, May 19, 2020

1. ஞானக் குழந்தைகள் ஓர் அறிமுகம்!

இன்று உலகளவில் 'ஆட்டிஸம்' (autism) பாதிப்பு மற்றும் 'வளர்ச்சிநிலை குறைபாடு' (developmental delay) என்று அறியப்படும் குழந்தைகளில் 'உயர் செயல்திறன் ஆட்டிஸம்' (high function autism) என்ற பிரிவின் கீழ் பேச்சு  தாமதம் (Einstein Syndrome),பிறர் கற்பிக்காமலே எழுதப்படிக்கத் தெரிவதுடன் (Hyperlexia),அனைத்தும் அறிந்தே பிறக்கும் ஞானக் குழந்தைகள் (Savant Syndrome)சந்திக்கும் விசித்திரமான பிரச்சனைகள் மற்றும் சவால்கள்-மேற்கண்ட விஷயங்களை வேறு கோணத்திலிருந்து அறிந்து கொள்ள முற்படும் ஒரு தந்தையின் முயற்சியே இது!



"ஸ்வாமி  விவேகானந்தர்  சொன்னதை சற்றே மாற்றிச்  சொல்கிறேன்! மேலே  குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளையுடைய  100 குழந்தைகளை அடையாளம்  கண்டு முறையாக அவர்களின்  திறமைகளை  நெறிப்படுத்த  முடிந்தால், இந்தியாவை  மட்டுமல்லாது  இவ்வுலகையே  நம்மால்  மாற்றியமைக்க  முடியும்! பன்னெடுங்காலமாக   உலகைப்  புரட்டிப்போட்ட பெரும்  கண்டுபிடிப்பாளர்களுக்கும் , உன்னதக்  கலைஞர்களுக்கும் ,விஞ்ஞானிகளுக்கும் , மெய்ஞ்ஞானிகளுக்கும் கூட  இதே  பிரச்சனைகள்  இருந்துள்ளன. ஆனால் நாம் சொல்லிவந்த பெயர்கள்தான் வேறு வேறு !

வழியறியாது தவித்த எனக்கு பாதை கட்டிய  ஞானிகள், சித்தர்கள், மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,நல்லுள்ளங்கள்,குடும்பத்தார்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்றென்றும் எனது நன்றி.இவர்களுடன் எனது மகளுக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். ‘அப்பனுக்கு’ உபதேசித்த முருகனைப் போல் அவள் பிறந்ததன் காரணமே பிறப்பின் ரகசியத்தை நான் அறிந்துகொள்ளத் தான் என்றே தோன்றுகிறது." 

வணக்கத்துடன்,

ராம் 





விஞ்ஞானிகள் மற்றும் சமயப் பெரியோர்கள் சிலரின் முக்கியப் பொன்மொழிகள்: